உலக அகராதியில்

நல்லவனுக்குப் பிழைக்கத் தெரியாதவன் என்றும்,
மோசமானவனுக்கு விவரமானவன் என்றும்
அர்த்தம்.

நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் எல்லாம்
நல்லவர்கள் என்றோ
கெட்ட பழக்கம் உள்ளவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றோ சொல்ல முடியவில்லை.
நல்லவர்களிடம் சில கெட்ட குணமும்,
கெட்டவர்களிடம் சில நல்ல குணமும்
இருக்கத்தான் செய்கிறது.

ஒருத்தனுக்கு நல்ல அம்மாவாய் இருப்பவள்
ஒருத்திக்கு கெட்ட மாமியாள்
ஆகி விடுகிறாள்.

தன் விருப்பத்திற்காக வாழ்பவர்களைக் காட்டிலும்,பிறர் விருப்பத்திற்காக வாழ்பவர்களே அதிகம்.

எழுதியவர் : செல்வமணி (28-Oct-16, 9:38 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ulaga agaraathiyil
பார்வை : 174

மேலே