என்னடா இந்திய தேசமிது

இருண்ட...........
என் இந்திய தேசத்தில்
இன்னொரு விடியலை உருவாக்க
வா ?......இளைஞ்சனே!
வெள்ளையனை விரட்டிவிட்டு
கொள்ளையனை
வைத்திருக்கும் கொடூரம்
அண்டை நாடுகளிலெல்லாம்
அபார வளர்ச்சியில் இருக்க
பண்டைய காலத்தை
பெருமையோடு பேசும் ..என்
பாரத திருநாடு
பிறக்கின்ற குழந்தையைக்கூட
கடனாளியாக பிரசவிக்கும்
என் இந்திய தாய்
உலக வங்கியில் .........
வாங்கிய கடனுக்கு
வட்டிமட்டும்தான்
கட்டிக்கொண்டிருக்கிறாள்
சுதந்திர நாடுஎன்று
சும்மா சொல்லிக்கொண்டு
ஏற்றிய தேசிய கொடிக்கு
எட்டடுக்கு பாதுகாப்பு
உளவு நிறுவனங்கள் .........
உறங்காமல் விழித்திருந்தும்
பண்டிகை காலங்களில்
பல அடுக்கு பாதுகாப்பு
என்னடா ?
இந்தியா தேசமிது !

எழுதியவர் : இரா .மாயா (1-Nov-16, 5:50 pm)
பார்வை : 56

மேலே