பார்த்த நொடி

பார்த்த நொடி

எதற்காய் பிறந்தேன் - நான்
உனக்காய் என புரிந்தேன்

எங்கும் நிறைந்த காதல்
என்னுள்ளும் நிறைந்தது

காதல் கொண்டு
காத்திருபேன்
வரும் வழி
பார்த்திருப்பேன்

கோடி நட்சத்திரம்
கூடி நின்றாலும்
நிலவுக்கு ஈடு இல்லை
என் நிலவுக்கு ஈடில்லை

நிலவை உரசி
செல்லும் மேகமா நான்
நிலவுக்காக காத்திருக்கும்
வானமாய் நான்

நீ
வந்தால் வளர்பிறை
இல்லை தேய்பிறை

காதல் கொண்டு
காத்திருபேன்
வரும் வழி
பார்த்திருப்பேன்

ரா தி ஜெகன்

எழுதியவர் : ஜெகன் ரா தி (1-Nov-16, 5:50 pm)
Tanglish : partha nodi
பார்வை : 145

மேலே