இந்த கணம்

சாளர இருக்கையில்
இரவு நேர பயணம்....

கார் மேகம் போல் சாலை
நட்சத்திரங்கள் போல்
ஒளிரும் வாகனங்களின்
மின் விளக்குகள்....

செவிக்குள் கேட்கும் இசை
புசிக்கும் கவிதை ....

பசிக்கும் வாழ்விற்கு
ருசியாய் இருந்தது
இந்த கணம் ....

எழுதியவர் : கிரிஜா.தி (1-Nov-16, 7:27 pm)
Tanglish : intha kanam
பார்வை : 166

மேலே