பல விகற்ப இன்னிசை வெண்பா இல்லற வாழ்வில் கணவன் மனைவி

Please read the following venPa and let me know if I have understood the Holi Kuran correctly.
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
இல்லற வாழ்வில் கணவன் மனைவி
ஒருவர்க் கொருவர் புரிதல் இருந்திடின்
சாந்துணையும் இல்லறம் நல்லற மாகுமே
என்பது முன்னோர்கள் வாக்கு
திருமண மாகி கணவன் மனைவி
இருவர்க் கிடையில் பிளவுகள் காணின்
இருவரின் பெற்றோர் கலந்துரை யாடி
ஒருவழி காணல்வேண் டும்
இருவரின் பெற்றோர் கலந்துரை யாடி
சுமுகமாய் வாழ வழிகள் வகுத்தும்
பிரிவது ஒன்றே நலமெனத் தோன்றின்
உளதொருசொல் மும்முறைகூ ற
இஸ்லா மியரில் கணவன் மனைவி
இருவர்க் கிடையில் பிளவுகள் தோன்றின்
உளதொருசொல் மும்முறை கூற கணவன்
மனைவி பிரிவார் உடன்
இல்லற வாழ்வில் கணவன் மனைவி
உடலுற வின்றி ஒருமுறை கூறி
ஒருமாத காலம் பொறுத்திருந்து மீண்டும்
ஒருமுறை கூறல்வேண் டும்
இருமுறை கூறியொரு மாதம் கழிய
உடலு றவிருவர்க்கி டையில்யில் லாதாயின்
மூன்றாம் முறையாய் தலாக்கென சொல்போதும்
என்பதேதி ருக்குரான்வாக் கு
03-11-2016