உன் முகவரி வாசலில்
மனத்தோட்டத்தில் நான் நடக்கிறேன்
-----------மலர்களாக உன் நினைவுகள்
மார்கழிப் பனியில் நான் நனைகிறேன்
----------மௌனமாக உன் நினைவுகள்
கற்பனை வானில் நான் மிதக்கிறேன்
-----------கவின் நிலவாக உன் நினைவுகள்
கவிதை வீதியில் நான் நடக்கிறேன்
-----------உன் முகவரி வாசலில் என் நினைவுகளுடன் நீ !
------கவின் சாரலன்