வாழ்க்கை
வித்து விளைந்தால்தான்
விரலுக்கும்
சத்து என்பதை
செத்து மடிந்தவனை பார்த்து
சிறிதேனும்
தெரிந்துகொண்டால்...
கொடுமை குடிவிலகும்
அடிமை
அகன்றுவிடும்!
பெண்மையின்
மென்மை
அறியாதவன்
நன்மையை
நரகமாக்கிவிடுவான்! - அதன்
தன்மையை
தகரமாக்கிவிடுவான்!
சுதந்திர காற்றை
அவளுக்கு
சுவாசிக்க விடுங்கள்!
சுகமான
வாழ்வு கிடைக்கும்!