மந்திரப் புன்னகை

தனிமை எனை எரித்து
குளிர்காய்ந்துக் கொண்டிருக்க..
அடடா
என்ன இது ?
இதயம் கருகும் வாசனையா?
எரிந்த தேகம் நனைக்க
ஒற்றைக் கண்ணீர்
துளி சிந்தினாய்..
சிதைந்த சிறகுகளுக்கு
வர்ணம் தீட்டினாய்
என்ன மாயம்!
எனது கண்ணீர்
துடைக்க வந்த
விரல்கள் எங்கே?
அன்பின் தற்காலிக
ஒப்பந்தமா இந்த உறவு..
மீண்டும் ஓர்
மந்திரப் புன்னகை புரிவாயா?
என் வடியுநீர் வெளியே
தெரியாமலருக்க..

எழுதியவர் : ஞானப் பிரகாசம் (5-Nov-16, 4:48 pm)
பார்வை : 189

மேலே