கை பிடிக்க ஆசை
அழகு மயிலாடும் சோலையிலே
ஆனந்தம் சேர்க்கும் நேரத்திலே
வண்ணங்கள் கூட்டி
அசைந்தாடி வரும் பைங்கிளியே
பரவசம் நாடி வருகிறான் காதலன்
உந்தன் கை பிடிக்கவே ஆசை கொள்கிறான்.
நிலவின் ஒளியில்,
ஏக்கத்தின் நிழலில்,
மயக்கும் கனவில்
மனதில் ஓராயிரம் எண்ணங்கள்
எடுத்துச் சொல்லவரும் நேரம்
ஆசையுடன் அவன் அருகில் வர
நினைப்பெல்லாம் மறந்து
அவன் உடல் பற்றியது சுகம்.
கூடுவது பெரும் களிப்பு
களைப்பே களிப்பின் முடிவு
களைவது மனம் ஏற்கா நினைப்பு
சொல்ல நினைப்பதும்,
சொல்லாமல் மறப்பதும்
சுகம் தரும் காலம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
