நாக்கு
எமதர்மன் சித்திரகுப்தனிடம் இனிமேல் சாகின்றவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்து கொண்டு வந்துவிடு என்று உத்தரவிட்டான்..
சித்திரகுப்தனும் நாக்கை வெட்டி கொண்டு வந்தான்.
''அவற்றில் சில நாக்குகள் துடித்தன,
சில நாக்குகள் மறுத்துபோய் கிடந்தன,
சில நாக்குகள் இரு கூறுகளாக வெட்டுபட்டு கிடந்தன."
இவையெல்லாம் யாருடைய நாக்குகள்? என்று எமதர்மன் கேட்டார்.
பிரபு இருகூறுகளாக கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளுங்கட்சிகாரர்கள் உடையது
துடிக்கின்ற நாக்குகள் எல்லாம் எதிர்கட்சிக்காரர்களுடையது என்றார் சித்திரகுப்தன்..
அப்போ மறுத்து போய் கிடக்கும் நாக்குகள் ..? என்று எமன் கேட்க
அது அவர்களுக்கு ஒட்டு மக்களுடையது என்று அமைதியாக சொன்னார்....!!!

