தென்றல் புயலாக மாறுமோ

கேள்வி கேட்பாரில்லை
எனை ,

கேட்டாலும் பதில்
சொல்ல தயாரில்லை .

தென்றலை உணர்ந்தது
இல்லை,

புயலுக்கு அஞ்சியது
இல்லை,

ஆதலால்,

நகர்தலும் நலமுடனே
நிகழ்ந்தது.

தென்றலாய் என்னுள்
ஊடுருவி,

உன்னை எனக்கு

உணர்த்திய தருணம்

சிறகுகள் முளைத்தது

மனமது தரையை
மறந்து

வானத்தில் பறந்தது

உன் வரவால்

புது அநுபவிப்பு

இத்தனை காலம்

இதை தவறவிட்டோமே
என்று

மனம் வருந்தியது

நாட்களும் நகர்ந்தது

இனிமையாக

தென்றலின் தழுவலை

எனக்கு உணர்த்திய
நீ

புயலின் தாக்கத்தை

எனக்கு உணர்த்த

தீர்மானித்தாய் போலும்

எதிர் பாராமல்

ஏதேதோ நடந்து
விட்டது

தென்றலின் தாலாட்டு

மனதை விட்டு

அகல மறுக்கின்றது

புயல் என்னை

புரட்டிப் போட்டப்
பின்னும்

அமைதியாக பதிலைத்

தேடினேன்

ஏன் இப்படி என்று?
#sof_sekar.

எழுதியவர் : #sof #sekar (9-Nov-16, 5:47 pm)
பார்வை : 223

மேலே