ம்ம்ம்களால் கொன்றவள்

அருகில் வரவா என்றால்
வெட்கத்தோடும்
அணைத்துக் கொள்ளவா என்றால்
மோகத்தோடும்
பிரியும் தருணங்களில்
கண்ணீரோடும்
பிழை செய்த நேரங்களில்
கோபத்தோடும்
இதழ் பிரிக்காமல் எழுதுவாய் நீ
"ம்ம்ம்"களால் ஓரெழுத்து கவிதையை

என்னை மறந்து விடுங்கள் என்ற
விஷம் தோய்ந்த வார்த்தைகளை
என் இதயத்தில் தெளித்த நொடியில்
"செத்து விடவாடா நான்" என்ற
என் ஒற்றைக் கேள்விக்கும்
எழுதியிருக்கலாம் நீ
மௌனம் தவிர்த்து
என் மரண கவிதைக்கும்
"ம்ம்ம்"களால் ஒரு சாசனம்

எழுதியவர் : மணி அமரன் (8-Nov-16, 11:09 pm)
பார்வை : 261

மேலே