வண்ணக் கனவுகள்
வண்ணக் கனவுகள்
வந்த வண்ணம் உள்ளன...
மணல் லாரிகளை
மண்ணுக்குள் தள்ளவேண்டும்....
காவிரியில் நீர் ஓட வேண்டும்...
நதியெல்லாம் தூர் வார வேண்டும்..
சாதிகளை தீயிட்டு கொளுத்தவேண்டும்...
வீட்டுக்கு பல மரங்கள் நடுதல் வேண்டும்..
விவசாயத்தின் பயனை வீதிதோறும்
பரப்பவேண்டும்...
தவறுக்கு தண்டனை உடனடி கிடைக்கவேண்டும்
தமிழுக்கு மணிமகுடம் சூட்டவேண்டும்..
பயமில்லாமல் சாலையில் பெண்கள் நடக்கவேண்டும்
பாரதியை மீண்டும் காணவேண்டும்...