கடுகு டப்பாவுக்குள் மறைச்சு வச்ச 500 ரூபாய்

அரசாங்க உத்யோகம் என்பாதால வேலை எல்லாம் அஞ்சு மணிக்கே முடிச்சிட்டு ஆறு மணி ஆகறதுக்கு முன்னாடியே வீட்டிற்கு வந்திடுவாங்க முரளியும் ரேவதியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க ஒரே பையன் சீக்கிரமே முன்னேறனுங்கறக்காக பல தில்லு முல்லு வேலையெல்லாம் பாத்திருக்காங்க ,, ஆனா என்ன ஒரு முறை கூட மாட்டினது இல்ல அதானே மாட்டினா தான ஆச்சர்யம் நம்ம நாட்டுல !!!!
அன்னைக்கு சாய்ங்காலாம் ஆறு மணி இருக்கும் ரெண்டு பேரும் வேலைய விட்டு வந்துட்டு அவங்க அவங்க தன்னோட வேலைய பாத்துட்டு இருந்தாங்க பையன் டியூசன் போயிருந்தான் அதனாலோ என்னவோ வீடே அமைதியா இருந்தது... முரளி எதோ பழைய இரும்புக்கு பெயின்ட் அடிச்சிட்டு இருந்தான் , ரேவதி துணி தைச்சுகிட்டு இருந்தாங்க இது ஒரு பகுதி நேர வேலை போல ...
என்னங்க ஒரு நாளுக்கு நீங்க காபி போட்டு கொடுங்களேன் தலையெல்லாம் வலிக்குது ...
தலை வலிச்சா காபி குடிக்கனும்னு எந்த மடையன் சொன்னான் டீவி மேல தையலம் இருக்கு அத எடுத்து தேச்சுகிட்டு பேசாம இரு முரளியிடம் இருந்து குரல் சற்று கராராக வந்ததால் அமைதியாகி விட்டால் ரேவதி ..
இருவருமே பயங்கர கருமிகள்
ஏழு மணி இருக்கும் தன் மகன் டியூசன் முடித்து வந்து விட்டு ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தான் , அடுக்கடியில் ரேவதி இரவு உணவுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள் இரவு ஏழு மணி சன் செய்தி கட்டாயம் பார்ப்பது அவர்களின் பழக்கம் அதற்காக தான் காத்திருந்தனர்
முக்கியச்செய்திகள் என செய்தி வாசிக்கும் பெண் தன் குரலை செருமி கொண்டு "இன்றிலிருந்து ௫௦௦,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நமது பாரத பிரதமர் தெரிவித்துள்ளார் " இது சற்று அதிர்ச்சியூட்டும் செய்தி தான் கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை இது என சரலமாக செய்தி வாசித்துக் கொண்டிருந்தார் .....
முரளியும் - ரேவதியும் ஓருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர் ரேவதிக்கு முகமெல்லாம் வேர்த்து மயக்கமே வந்துவிடும் போல இருந்தது முரளி தன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்
நிமிர்ந்து பார்கையில் தன் மனைவியை காணவில்லை அதிர்ச்சியடைந்து தேடினான் சமையல் கட்டினுள் நுழைந்து போது அவன் கண்ட காட்சி " ரேவதி கடுகு சீரக டப்பிக்குள்ளும் அரிசிப்பைக்குள்ளும் ஒழித்து வைத்திருந்த ௫௦௦,1000 ரூபாய் நோட்டுகளை எடுத்து போட்டபடி இருந்தாள் ,
அடிபாவி எனக்கு தெரியாம இவ்ளோ பணம் மறைச்சு வச்சுருக்கியா ???? மாட்டிக்கொண்ட பயத்தில் பதிலேதும் பேசாமல் நின்றிருந்தாள் ரேவதி
என்னையும் மன்னிச்சிருடி உனக்கு தெரியாம நானும் பழைய துணி பைக்குள் ஒழித்து வைத்திருந்த பணம் ஒரு கத்தை ஐநூரு ரூபாய் நோட்டுகளை நீட்டினான் முரளி
இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி அப்பொழுது தான் இருவருக்கும் புரிந்தது நம்ம ஒரு வீட்லையே இவ்வளவு கருப்பு பணம்னா நாடு முழுக்க எவ்வளவு இருக்கும்னு ....