மகுடம்

"அய்யா உங்கள தலைமை ஆசிரியர் வரச்சொன்னார்" என்ற வார்த்தையை கேட்டு " என்ன ராஜா வழக்கம் போல பஜனையா.. நானும் இருபது வருசமா இந்த வேலைய பாக்குறன்.. மாற்றத்தையும் பாக்குறன்.. இப்பல்லாம் தமிழ் ஆசான் என்றால் இதுதான் கதி" என்று கூறிக்கொண்டே தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தவர் அதிர்ந்து போனார்.

அங்கே தலமை ஆசிரியரும் அதிபரும் அமர்ந்திருந்தனர்.என்ன ஆச்சரியம்! ராஜாவை பார்த்ததும் இருவரும் எழுந்து கையை குலுக்கி வாழ்த்தினர்.ஏன் வாழ்த்துகிறார்கள் என்று புரியாது திருதிருவென்று முழித்தார் ராஜா.

உடனே எழுந்த தலமை ஆசிரியர்
"ராஜா நீங்கள் ஒவ்வொரு வருடமும் செய்து அனுப்பும் தமிழ் பாட செயற்றிட்டம் இவ்வருடம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது. அதற்கு உங்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு ஒழுங்குபடுத்தியிருப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளது.ஆங்கிலப் பாடமே எமக்கு பெருமை ஏற்படுத்தி தரும் என் அவநம்பிக்கையால் தமிழ் பாடத்தை பற்றி சிந்திப்பதில்லை ஆனால் இன்று தேசிய ரீதியில் தமிழ் பாடமே எம் பாடசாலையை உயர்த்தியுள்ளது.நாமும் உங்களுக்கு கௌரவிப்பும் பதவியுயர்வும் தருவதற்கு முடிவெடுத்துள்ளோம்" என்று கூறி முடிக்க...

ராஜாவோ மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.தன் வாழ்வில் மகுடம் குறைவில்லாது தன்னை தொடர்ந்து வந்திருக்கிறது என்று. தனக்கு பெருமை தேடித்தந்த தமிழுக்கு நன்றி கூறிக்கொண்டு ராஜா அளவற்ற மகிழ்ச்சியுடன் வகுப்பை நோக்கி சென்றார்.

எழுதியவர் : சி.பிருந்தா (14-Nov-16, 12:20 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : makudam
பார்வை : 265

மேலே