புரியாத காதல்

கண்மூடித்தனமாக
உன்னை
காதலிக்கிறேனடி....
எனை மண்மூடி
மறைக்க நினைப்பது
நீயாயமா சொல்லடி..

காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
பூக்களிடம் என் காதலை
சொன்னாலாவது வாசத்தை
வீசி ஏற்றிருக்கும்...
உன்னிடம் சொன்னது
கடலில் கலந்த தேனாய்
வீனானதடி...

என் நெஞ்சின் நினைவுகளை
படித்து பாரடி அதில் உன்
பிம்பமும் உன் எண்ணங்களுமே
அழித்து எழுத முடியாதப்படி
உள்ளதை நீ உணர்வாயடி..

உணர்ந்து பாரடி என் காதலை
அது கடலினும் ஆழமான காதல்...

எழுதியவர் : செல்வமுத்து.M (14-Nov-16, 10:07 am)
Tanglish : puriyaatha kaadhal
பார்வை : 1095

மேலே