ரம்யா - 1

R A M Y A

R ரசிக்கின்றேன்
A அணுவணுவாய்
M மனதில்
Y என்னவளின்
A அன்பை......!!!

R ராகத்தின் தோழியா
A அன்பில் அருவியா
M மோகத்தின் வேள்வியா
Y ஏனடி என்னை
A அபகரித்தாய்......!!!

R ராணியாய் என்னை
A அன்பில் ஆளுகிறாய்
M மெல்லிய மொழியில்
Y எண்ணம் மீட்டி
A ஆசை வளர்க்கிறாய்......!!!

R ராவோடு பூக்கும்
A ஆசை பூவே
M மையல் கொள்ள
Y எங்கும்
A அன்பு காற்று நான்......!!!

R ரம்யமான பொழுதில்
A அன்பே உன் இதழில்
M மெல்லிய வருடல்
Y ஏகாந்த கனவில்
A அரங்கேற்றம் விரைவில்......!!!

எழுதியவர் : ஜெகன் ரா தி (14-Nov-16, 12:02 pm)
பார்வை : 1333

மேலே