கதை எழுதனும் ,

இந்த முறையும் எனது கதை நாவலில் வெளிவரவில்லை நான் நல்லா தான் கதை எழுதறேன் ஏன்னு தான் தெரில சற்றே புலம்பி கொண்டிருந்தாள் தமிழ்...
பெயருக்கு ஏற்றார் போலவே தமிழிலிலும் அதிக ஈடுபாடு கொண்டவள் சிறுகதை,கவிதை எல்லாம் அவளின் அலாதியான பிரியங்கள் வாரமம் ஒரு முறை வரும் புத்தகங்களுக்கு கதை எழுதுவாள்
எப்பப்பாரு எதாவது எழுதிக்கிட்டே இருடி ஒரு வீட்டு வேலை செஞ்சிடாத திட்டிக் கொண்டிருந்தாள் தமிழின் அம்மா
யார் என்ன பேசினாலும் அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள் எழுத்தாளர் ஆவதே அவளின் மிகப்பெரிய குறிக்கோள் ,,
ஒரு கதை எழுதி முடித்த திருப்தியில் அதை பதிவஞ்சல் செய்து விட்டு இந்த முறை கண்டிப்பா கதை வெளியிடுவாங்க என்ற ஒரு நிம்மதியுடன் வந்து கொண்டிருந்தாள் வந்தவளுக்கு ஒரு அதிர்ச்சி வீட்டில் உறவினர்கள் எல்லாம் வந்திருந்தனர் டீ , பலகாரம் என தடபுடலாக ரெடி ஆகியது அவளுக்கு ஒன்றுமே புலப்படவில்லை அவளின் அம்மா அவளை கூட்டிக் கொண்டு போய் இந்தப்புடவைய கட்டீடு பூ வச்சிட்டு வா என்று சொல்லும்போது தான் புரிந்தது தனக்கான பெண் பார்க்கும் படலம் நடப்பது அழுகையாக வந்தது அவளுக்கு அம்மாவின் வற்புறுத்தலுக்கிணங்க காபி கொடுத்தாள் ...
பொன்னை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கையோட கல்யாண தேதியும் குறிச்சிடலாம் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து குரல் அதை ஆமோதிக்கும் விதமாக பெண் வீட்டாரும் சரி என்றனர்
உடைந்தே போய் விட்டாள் தமிழ் அனைவரும் இருக்கின்றனரும் என்றும் பாராமல் கதறி அழுதுவிட்டாள் , தன் மகள் காதலில் எதாவது விழுந்துவிட்டாலோ என பயந்தாள்
"எல்லோரும் என்ன மன்னிச்சிடுங்க , எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல , எனக்கு நிறைய கனவு இருக்கு கதை எழுதனும் ,புத்தகம் எழுதனும்னு கை யெழுத்து கும்பிட்டு அழுதாள்
ஒருமுறை கூட நம் மகளின் விருப்பத்தை கேட்டதில்லையே அதானால் தானோ என்னவோ நம் மகள் இன்று மற்றவர் முன் கைகட்டி நிற்கிறாள் , தவறு நம் மேல் தான் பெற்றவர் மேல் தவறை வைத்து பிள்ளைகள் மேல் குறை சொல்லுவது எதில் நியாயம் முதலில் பிள்ளைகளின் கனவுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று அன்றுதான் புரிந்தது

எழுதியவர் : க.நாகராணி (17-Nov-16, 10:08 pm)
சேர்த்தது : நாகராணி
பார்வை : 393

மேலே