காதலை தேடி-31

காதலை(லே) தேடி-31

சில நேரங்களில்
விடை தெரியா கேள்விகள்
கூட சுகமாக தான்
இருக்கிறது விடை
காணும் வரையிலும்....

என் சகியை தேட ஆரம்பிச்சி இதோட ஒரு மாதம் முடிவடைய போகுது ஆனாலும் என் சகியை என்னால கண்டுபிடிக்க முடியல, ஒருவேளை அவள் இந்த ஊரிலேயே இல்லையா, இல்லை என் கண்களுக்கு மட்டும் பிடிபடாமல் ஒளிந்து விளையாடுகிறாளா!!!!! ஒன்றுமே விளங்காமல் தோற்றுகொண்டே இருக்கிறேன்....

"சார், எனக்கு தெரிஞ்ச வரை எல்லா இடத்துலயும் தேடியாச்சு சார், மூல முடுக்குனு ஒரு இடம் விடாம உங்களுக்கு எல்லா இடத்தையும் சுத்தி காட்டிட்டேன், ஆனா நீங்க தேடறவங்க கிடைக்கவே இல்லையே"

"கிடைக்கல தான், கிடைச்ச பொக்கிஷத்தை தொலைச்சிட்டு இன்னைக்கு தேடினா மட்டும் கிடைச்சிருவாளா"

"அப்படி விரக்தி அடையாதீங்க சார், மேடம் உங்களுக்கு சீக்கிரமே கிடைச்சிருவாங்க, இந்த ஒரு மாசத்துல நீங்க என்கிட்ட பேசினது குறைவு தான், அப்டியே பேசினாலும் அது மேடம் பத்தி தான் இருக்கும்....நீங்க எந்த அளவுக்கு மேடத்தை லவ் பண்றிங்கனு எனக்கே புரியும்போது அந்த கடவுளுக்கு புரியாதா சார், மேடம் எங்க இருந்தாலும் அவரு உங்களை அங்க கூட்டிட்டு போய் பாக்க வச்சிடுவாரு...."

"இல்லப்பா, இதுக்கு மேல எனக்கு மனசுலயும் இல்ல, உடம்புலயும் தெம்பு இல்ல, இந்த ஒரு மாசம் ஒவ்வொரு இடத்துக்கு போகும்போதும் அவளை பாக்க மாட்டேனா, அவகிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டேனான்னு ஏங்கி ஏங்கி எத்தனை கனவுகள் கண்டிருப்பேன், ஆனா எல்லா நேரமும் ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம்...அவ இந்த ஊருல இருந்திருந்தா நிச்சயமா ஒரு முறையாவது அவளை நான் பாத்திருப்பேன், ஆனா அப்படி இதுவரை எதுவுமே நடக்கலையே, அவ இந்த ஊருல இல்ல, இதுக்கு மேல அவளை இந்த ஊருல தேடற மனவலிமையும் எனக்கு இல்லப்பா....நான் நாளைக்கு ஊருக்கு கிளம்ப போறேன், அவளை மறந்துட்டோ, இல்ல விட்டுட்டோ இல்ல, சோர்வடைஞ்ச என் மனச தேத்தி மீண்டும் ஒரு தேடலை ஆரம்பிக்க தான் இந்த முடிவு"

"என்னால உங்க உணர்வுகளை புரிஞ்சிக்க முடியுது சார், நீங்க சொன்ன மாதிரி இப்போ உங்க தேடலுக்கு ஒரு இடைவெளி தேவை தான், அதனால நீங்க ஊருக்கு போயிட்டு உங்க மனசுக்கு கொஞ்சம் தெளிவு கிடைச்சதுக்கு அப்புறம் திரும்ப வாங்க சார், அப்படி திரும்பி வந்திங்கனா உங்க பயணத்துக்கு நான் எப்பவும் துணையா இருப்பேன் சார், என்ன கூப்பிட மறந்துடாதீங்க, இது பணத்துக்காக இல்ல சார், உங்க மனசுக்காக...உங்க காதலுக்காக"

"தேங்க்ஸ்ப்பா, உன்ன பத்தியும் இந்த கொஞ்ச நாள்ல நான் புரிஞ்சிக்கிட்டேன், கொஞ்சம் கூட சளிக்காம சொன்ன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போன, இந்த ஒரு மாசமும் உன் வீட்டுக்கு கூட போகாம இரவும் பகலுமா என்னோடயே இருந்து எல்லா விதத்துலயும் எனக்கு துணையாவும், ஆறுதலாவும் இருந்த... உன்ன என்னைக்கும் மறக்க மாட்டேன்பா"

"சார், இத்தனை நாளா உங்க கூடவே இருந்தேன், ஆனா மேடமோட போட்டோவை ஒரு தடவ கூட நான் பாத்ததே இல்ல, அவங்கள பாக்கணும் போல இருக்கு, நீங்க தப்பா நினைக்கலைனா அவங்கள நான் பாக்கலாமா"

"கண்டிப்பா பாக்கலாம், ஆனா போட்டோவை முகமதுகிட்ட கொடுத்திருக்கேன், அவர் மூலமா சிலரை விசாரிக்க சொல்லிருக்கேன், என் போன்ல சகி போட்டோ இருக்கும்...ஒரு நிமிஷம் இருப்பா எடுத்து காட்டறேன்"

"சரிங்க சார்"

"ஷெட், இப்படி ஆச்சே"

"என்ன சார், என்ன ஆச்சு?"

" போன்ல சார்ஜ் இல்லப்பா, போன் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு, நான் கவனிக்கவே இல்ல,உங்கிட்ட சார்ஜர் ஏதாவது இருக்காப்பா?"

"இருக்கு சார், ஆனா உங்க போன்க்கு செட் ஆகாதே"

"இத்தனை நாள் உன்கூடவே இருந்தும் எப்படி உனக்கு சகி போட்டோவை காட்டாம போனேன், எனக்கே புரியலப்பா, இப்போ நீ கேட்டும் என்னால காட்ட முடியல"

"பரவால்ல சார் விடுங்க, ஏற்கனவே டைம் ஆச்சு, இப்போ இத பத்தி யோசிச்சோம்னா நேரத்துக்கு ஹோட்டல்க்கு போக முடியாது, உங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரி இல்லை, இதுல இன்னைக்கு ரொம்பவே அலைச்சல் வேற, நீங்க ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க சார், நான் நாளைக்கு மேடம் போட்டோவை பாத்துக்கிறேன்"

"சரிப்பா"


இந்த விதி ஏன் பலநேரங்களில் இப்படி விளையாடுது, கண்ணுக்கு முன்னாடி எல்லாமே நடந்தாலும் எதுவும் புரிபடா புதிராக இருக்க காரணம் தான் என்ன??...

விதியின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு சில நேரங்களில் சந்தோஷத்தை கூட கொடுக்க தான் செய்து, அப்படி சில சந்தோஷங்களை சகி என்னோடு இருக்கும்போது நான் அனுபவிச்சதே பெரிய விஷயம் தான்...

...................

"சகி இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட போற?"

"எதுக்கு இந்த கேள்வி?"

"இல்ல நானும் அதே கலர்ல டிரஸ் போடலாமேன்னு தான்"

"நாம என்ன புதுசா கல்யாணம் ஆன புதுமண தம்பதினு நினைப்பா, நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு, நியாபகம் இருக்குல்ல?"

"இருந்தா இருந்துட்டு போகட்டும்டி, அதுக்கென்ன, நாலு வருஷம் ஆனா, ஒரே கலர்ல டிரஸ் போடக்கூடாதா"

"போடக்கூடாது தான், ஏற்கனவே அத்தைக்கு என்மேல மனஸ்தாபம், சிலரால் அந்த மனஸ்தாபம் கோவமா மாறிட்டு இருக்கு, இதுல ஒரே கலர்ல டிரஸ் போட்டா அவ்ளோ தான், அவங்க கோவத்தை நாமளே அதிகப்படுத்தின மாதிரி ஆகிடும்"

"என்ன சகி இப்படி சொல்ற, அம்மா கோவம்லாம் ஒரு காரணமா,அவங்க கோபத்தையும் பாசத்தையும் என்னைக்கு மறச்சிருக்காங்க, எல்லாத்தையும் வெளிப்படையா கொட்டி தீர்க்கறது தான அவங்க குணமே"

"தெரியும்ங்க, அதுக்கு தான் சொல்றேன், இப்போ அவங்க கோவத்தை நாமளே கிளறி விட வேணான்னு"

"அதெல்லாம் தெரியாது, என் செல்ல பொண்டாட்டி தான, ப்ளீஸ்டி, இந்த பங்க்ஷனுக்கு நாம ஒரே கலர்ல டிரஸ் பண்ணிட்டு போகலாம், என் செல்லம்ல, என் ஆசைய நிறைவேத்தி வைடி "

"அதெல்லாம் முடியாது, நான் தான் காரணம் சொல்லிட்டேன்ல, உங்க ஆசை நம்ப ரெண்டு பேருக்கும் சேத்தி ஆப்பு வைக்கும்னு தெரிஞ்சும் இந்த ஆசை தேவை தானா"

"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், இப்போ நீ என்ன கலர் போட போறேன்னு சொல்றியா இல்லையா"

"முடியாது"

"சொல்லாட்டி போ, நானே பாத்து தெரிஞ்சிக்கிறேன், இன்னைக்கு எப்படியும் நாம ஒரே கலர் டிரஸ் தான் போட போறோம், இது நிச்சயம்"

"என்ன சேலஞ் பண்றிங்களா?"

"ஆமா, அப்படி தான்னு வச்சிக்கோ"

"சரிங்க பாத்துக்கலாம், பட் தோற்க போறது நீங்க தான், அத நினச்சா தான் கொஞ்சம் கவலையா இருக்கு"

"அதையும் தான் பாக்கலாமே"

"ம்ம்ம்ம்,பாக்கலாமே"

என்ன இவ, எங்க இருக்கானே தெரியல, சேலஞ் பண்ணி இதோட முழுசா ஒரு மணி நேரம் முடிய போகுது, இன்னுமும் கிளம்பாம எங்க ஒளிஞ்சிட்டு இருக்கா, அம்மாட்ட கேட்கலாம்னா அவங்க ஏற்கனவே கடுப்புல இருக்காங்க, இப்போ போய் நான் அவங்கள கேட்டா என்ன அடுப்புல வச்சி வறுத்தெடுத்தாலும் ஆச்சரியம் இல்லை, ஆஹா கடுப்பு அடுப்பு, ரைமிங் கூட நல்லா தாண்டா பண்ற சாரதி....

"சாரதி, என்னப்பா பண்ற, நாங்க எல்லாரும் கிளம்பியாச்சு, நீ இன்னும் கிளம்பலையா?"

"அப்பா, நான் கிளம்பிட்டேன், இந்த சகிய தான் தேடிட்டு இருக்கேன்"

"சகியா, அவ தான் அப்போவே ரெடி ஆகி வெளிய போய்ட்டாளே, கார்ல தான் இருப்பான்னு நினைக்கிறேன், உன் அம்மா வர்ரதுக்குள்ள காருக்கு வந்து சேரு"

"என்ன இங்க பண்றிங்க, எல்லாரும் கார்ல வைட் பண்ணிட்டு இருக்கோம், அப்பாவும் பையனுமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"உங்க அம்மாக்கு நூறு வயசுப்பா, இப்போ தான் அவளை பத்தி பேசினோம், அவளே வந்து நிக்கறா பாரு"

"சாரதி, கிளம்பிட்டல்ல, சீக்கிரம் வா, வந்து காரை எடு, இப்போவே நேரம் ஆச்சு"

"அம்மா அது வந்து"

"இப்போ நீ வர போறியா இல்லையா"

"வரேன்மா"

அடி பாவி, இவ்ளோ நேரம் சிகப்பு கலர்ல புடவை கட்டிட்டு இருந்தவ இப்போ பச்சை கலர்ல புடவை கட்டிருக்கா , எவ்ளோ பிராடு வேலை பண்ரா என் சகி, உனக்கு இருக்குடி...

"எப்படிங்க, நான் சொன்ன மாதிரி ஜெயிச்சிட்டேனா, இதுக்கு தான் இந்த சகி கிட்ட சவால் விட கூடாதுனு சொல்றது...பாவம் இப்போ ஏமாந்து நிக்கறீங்களா"

"இன்னும் நம்ப பந்தயம் முடியல சகி, இன்னைக்கு நாம பங்ஷனுக்கு ஒரே கலர் டிரஸ் தான் போட்டுட்டு போக போறோம், நான் தான் ஜெயிக்க போறேன், வேணும்னா பாரு"

"மந்தரம் ஏதாவது போட போறிங்களா"

"பொறுத்திருந்து பாரு செல்லம்"

எழுதியவர் : இந்திராணி (18-Nov-16, 1:21 pm)
பார்வை : 673

மேலே