ஒருபக்க காதல்கதை பாகம்-13

அவன் சென்ற பாதையில் வெறுப்பை பற்ற வைத்து பின் வேலைக்கு சென்றால் ரெகார்டிங் தியேட்டர் பக்கம்..

அவள்: (அவன் பேசியதும் செய்ததும் மனதில் ஓட) ..ஓஹ் காட்!ஓஹ் காட் !ஓஹ் காட் !..இந்த வலி இப்படி இருக்கும்னு நா நினைக்கவே இல்ல ..இத நீ ஏன் பண்ணனு எனக்கு தெரில கார்த்திக்...

அங்கொருவன் : என்னமா வசனத்தை தப்பா பேசுற ...இத நீ ஏன் பண்ணனு எனக்கு தெரில கார்த்திக்...இல்ல இத நான் ஏன் பண்ணேன்னு எனக்கு தெரியல கார்த்திக் ..யோசனை எங்க இருக்கு..அங்க டைரக்டர் கத்திட்டு இருக்காரு ...(என அவன் புலம்பல்களில் பட்டப்படிப்பு வாங்கிக்கொண்டிருந்தான்)

அவள்: ஏதும் கூறாமல்.. ஏதோ திடீர் சிந்தனையில் அங்கிருந்து புறப்பட்டாள்

அங்கொருவன்: இங்க பேசிக்கிட்டே இருக்கேன் எங்கம்மா போற ..உன்னைத்தான் ...

வண்டி அதனின் அதிவேகத்தில் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் பறந்தது ..வேகக்குறை ஏற்பட்ட இடத்தில லயோலா காலேஜ் கேட் இருந்தது..உள்ளே அவனும் வேறு இளம் பெண்ணும் ..அப்போதுதான் காதலை பரிமாறிக்கொள்ளும் ..பிரிந்த காதலர்கள் போல்.

அவள்: இவ்ளோதான் நீயா?

அந்த பெண்: அக்கா..நீங்களா ..ஐயோ எனக்கு பேச்சே வரல ..உங்களுக்கு நன்றிய எப்படி சொல்றதுன்னே தெரியல அக்கா ..உங்கள என் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன் ...இதைவிட எப்படி சொல்றதுன்னு தெறியலக்கா(என காலில் விழுந்தாள்)

அவள்: யாருமா நீ ...எந்திரி மொதல்ல ..எதுக்கு ஏன் கால்ல விழற ?

(வகுப்பு நேரமானதை உணர்த்த பெல் அடித்தது..)

அந்த பெண்: அக்கா கிளாஸ்சுக்கு மணியாச்சி ..மத்ததை அண்ணா சொல்லுவாரு வரேண்கா ..
(எனக்கூறி முகம் முழுக்க புன்னகையுடன் அவள் தோழிகளுடன் உள்ளே சென்றாள்..)

அவன்: என்ன மேடம் எங்க இந்த பக்கம்?

அவள்: என்ன நடக்குது ..யாரு அவ?

அவன்: எதை விட்டாலும் விடுவீங்க ஆனா உங்க அசட்டு சந்தேகமும்..அழகு பொறாமையும் உங்கள விட்டு போகவேபோகாது இல்ல ?..அந்த பொண்ணுக்கு தஞ்சாவூர் ..12ஆவது விடுமுறைல மாஸ்டர் ஹெல்த் செக்கப் அப்போதான் அவளுக்கு கேன்சர் இருக்றதும் சீரியஸ் ஆகிட்டு வர்றதும் தெரியவந்தது ..கீமோதெரபில தன்னோட முடிய இழந்துட்டா..பெரிய கல்லாரியில இடம் கெடச்சும் முடியில்லாம ..மத்தவங்க முன்னாடி வரமுடியல..அனுதாப கொலைகாரர்கள் தான் அதிகமாச்சே நம்ம நாட்டுல.... முடிவே தெரியாம அழுதுட்டு இருந்தா..இப்போ அவளோட முடியும் இந்த சந்தோஷமான முடிவும் உன்னோடது ....

அவள்: அப்போ என்னோட வீட்டுக்கு வந்து திருப்பாச்சி விஜய் மாதிரி திருடிட்டு போயிருக்க இல்ல ?

அவன்: எதுலையுமே ஒரு சுவாரசியம் வேணும்..கடைசிப்பக்க நாவல் மாதிரி ...

அவள்: மத்தவங்க வாழ்க்கைய சுவாரசியம் ஆக்குறது எனக்கும் புடிக்கும் ..எனக்கூறி அவன் மேடு பள்ள கன்னத்தில் மிதமாக இரு இதழ்களை ஒத்தி எடுத்து ..அங்கிருந்து நகர்ந்தாள் இன்பத்தில் ...

(ஸ்கூட்டர் பயணத்திற்கு தயாரானது...)

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (17-Nov-16, 3:43 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 373

மேலே