அழகு

வெக்கம்@@@

வளர்ப்பின் விதம் காட்டும் விழியலகில் உன்வெக்கம்
நிலவின் நிறவொளியாய் மாறுது என்பக்கம்

சுவாசம்@@@

மொட்டு பூவாக கெஞ்சுது இயற்கை
மலர்நுனிகொண்டு ஈர்க்கும் உன்சுவாசக்காற்றை

வாசம்@@@

பூரித்த மலர்கள் பெற்றதோர் தண்டனை
இறுதியில் வென்றதோ என்வஞ்சியின் வாசனை

கவிதை@@@

காதல் பேசும் கவிதைகள் களவு
ததும்பும் உன்னிடம் இருந்த வரவு

சிரிப்பு@@@

எப்படியோ இருந்திருப்பேன் நீமட்டும் இல்லையென்றால்
இப்படியோர் ரணம் கண்டேன் சிரித்திடும் உன்னை கண்டால்!

எழுதியவர் : ராம் (17-Nov-16, 10:18 pm)
Tanglish : alagu
பார்வை : 113

மேலே