கல்நெஞ்சக்காரன்
மாலை மயங்கிய வேளை.
சிலர் மட்டுமே செல்லும் அந்த
சாலையில் தனியாக நடந்து
சென்று கொண்டிருந்தாள்.
சற்று தொலைவில்
மிதி வண்டியில் நான்.
“அவளுக்கு துணையாகச் செல்லலாமா?
அவளுடன் பேசிவிடலாமா?
அவளைப் பார்த்தாவதுவிடலாமா?
…………………...”
என்று கடக்கும் முன்
எத்தனையோ சிந்தித்தவன்.
அவளைக் கடக்கும் வேளையில்
யாரென்றே தெரியாதவன்போல்
விரைவாக வந்துவிட்ட
நான் ஒரு கல்நெஞ்சக்காரன்.