காத்திருப்பு

சுகத்திலும் சுகமானது காத்திருத்தல்
சுந்தரியின் வருகையை எதிர்பார்த்தல் !
காதலியும் காத்திருப்பாள் காதலனுக்கு
காரிகை தவித்திடுவாள் நேரமானால் !
கைப்பிடித்தக் கணவனை வரவேற்றிட
மையலுடன் காத்திருப்பாள் மனைவியும் !
காலமதுவும் கடந்திட்டால் நொந்திடுவாள்
காலத்தின் விரைவுதனை கடிந்திடுவாள் !
காத்திருக்கும் காதலியும் வருந்திடுவாள்
காதலிக்கும் காளையவனை நிந்திப்பாள் !
காதலிக்கும் மோகத்தால் குன்றிடுவாள்
காத்திட வைத்ததால் சினம்கொள்வாள் !
காதல்ரசம் வழிந்திட விழித்திருப்பாள்
காதலனைக் கண்டவுடன் பொங்கிடுவாள் !
காத்திருக்கும் கன்னிக்கும் புரிந்திருக்கும்
காத்திருப்பின் பலன்களும் அறிந்திருக்கும் !
பழனி குமார்