உரைத்திட வைத்திடுவேன் உண்மையை

பணிமுடித்து பசியோடு வந்தவனை
கனிவோடு பரிமாறும் பாங்குடையாள்
பரிவோடு பார்த்திடும் பார்வையுந்தான்
உள்ளத்தில் நினைப்பதும் இப்படித்தான் ..

இதயத்தால் இணைந்தவள் நானிருக்க
இலையில் உள்ளதையே காண்கிறானே
கறிக்குழம்பும் மீனும் சுவையெனினும்
கட்டிக்கிட்ட நானுந்தான் தேவையென்று
கெட்டிக்கார கணவனும் நினைக்கலையே ...

ஆசையோடு பார்க்கிறானே சாப்பாட்டை
அருகிலேயே இருக்கிறேனே அணைத்திட
என்னையும் பார்க்கத்தான் தோணலையே
ஏக்கத்தோடு இருப்பவளைத் தெரியலையே
காரணத்தை அறிந்திடுவேன் இன்றிரவே
உரைத்திட வைத்திடுவேன் உண்மையை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Nov-16, 9:39 pm)
பார்வை : 207

மேலே