ஏன்
மனம் உள்ள மலர்கள்
மலர்ந்து மனம் பரப்பி
மற்றவர்களை கவரும்
மனமில்லா மலர்களும்
கவரும் தன் நிறத்தால்
மயானத்தில் மலர்ந்தாலும்
சேற்றில் உதித்தாலும்
தோட்டத்தில் தோன்றினாலும்
மலர்கள் மலர்கள் தான்
மனிதன் மட்டும்
மாறுபடுகின்றான்
இடத்திற்கு இடம்
வேறுபடுகின்றான்!
#sof #sekar