மனிதா எழுந்திடு

பறவைகள் எல்லாமே பறப்பதில்லை
சில நடக்கின்றன
சில பறக்கின்றன
பிரச்சனை பறப்பதில் இல்லை
இளைஞனே!
அவை நிலத்தை விட்டு மேலே எழுவதில்தான் இருக்கின்றது
எழுந்துவிட்டால் பருந்தை கண்ட
கோழி போல பறந்துவிடும்
எழ எழ தான் பறக்கவேண்டும்
என்ற ஆர்வம் தோன்றும்
சோர்ந்து தேய்பவனே நீயும் எழு விழித்தெழு
வெற்றி வானில் பறப்பது கடினம் இல்லை