கண்ணீர் பருகுவதேனோ

எனக்கெனவென்று வந்த
உறக்கம் உன் நினைவுகளின்
இடுக்கில் தற்கொலை
செய்து கொண்டதோ?

வெள்ளை காகிதமாய்
இருந்த என் வாழ்க்கையில்
வார்த்தைகளற்ற மொழிகள் எழுதியவள் நீ !

அடடா உந்தன் நினைவுகள் என்
கண்ணீர் பருகுகின்றன..
அதற்கும் கவி தாகமோ என்னவோ ?

உறக்கம் தேடி தொலைந்த
இமைகளின் ஈரப்பசைகளோடு நான்!

ஒற்றைப்பார்வையில்
உயிர் நாண் ஏற்றுபவளே !
உந்தன் நினைவுகளை
திரும்ப பெற்றுக்கொள்
நான் உயிர் பிழைக்க ..

எழுதியவர் : ஞானப்பிரகாசம் (21-Nov-16, 11:19 pm)
பார்வை : 98

மேலே