நகைச்சுவை-இப்படியும் ஒரு வியாபாரம்
வழிப்பறி செய்து கொள்ளை அடித்த தங்கத்தை
அந்த திருடன் வழக்கமாய் செல்லும் சேட்டு கடைக்கு
செல்கின்றான், நகைகொடுத்து, பணம் வாங்க ;
அங்கு நடக்கும் உரையாடல் :
திருடன் : வணக்கம் சேட்டு ; மால் கொண்டாந்து இருக்கேன்
அர்ஜென்ட் ஆ கேஷ் தேவை - இருந்தா சொல்லு
மால் தாரேன் .........................
சேட்டு : நீ ஏன்னா நாம கடைக்கு புதுசா என்ன ,இப்படி
அர்ஜென்ட் படுத்தற ............சேரி மாலை காட்டு,
டெஸ்ட் பண்ணி , நிம்பள் காசு சொல்லறான்...
(டெஸ்ட் பண்ணி படும் குஷி ஆரான் சேட்டு;
கொண்டுதாந்த மால் அஞ்சு சவரன் அசல்
தங்க செயின் ஒன்னரை லக்ஷம் பொரும்;
கொஞ்சம் யோசிக்கற மாதிரி இருந்து ,பின்னே
திருடனை பார்த்து சொல்லறான்)
இதோ பாரு என்கிட்டே என்ன எதிர்பார்க்கிறே
சொல்லு........
திருடன் : சேட்டு இப்போ இந்த ஐநூறு, ஆயிரம் நோட்டு செல்லாது
அதனால உன் கிட்ட இருக்கும் சில்லறை நோட்டுல (பத்து
,நூறு) ஒரு ஒரு லக்ஷம் தள்ளு போயிடுறேன்; அசல் மால் சேட்டு
சேட்டு : சரி சரி ; எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம்
நம்மில் கிட்டே ஒரு முப்பது ஆயிரத்துக்கு சில்லறை
நோட்டு இருக்கு ,வேணும்னா சொல்லு தர்றேன்
திருடன் : சரி சேட்டு ஏதோ இருப்பது கொடு போதும்
போதும் என்ற மனசே போன் செய்யும் னு ஏதோ
சொல்வாங்களே.............அது
(சேட்டு பணம் தர, திருடன் மாயம் )
சேட்டு : நம்ம காய் விட்டு சில்லறை போனாலும்
லக்ஷுமி (தங்கம்) வந்தாச்சு,அதுவும்
அடிமாட்டு விலையில ............
ஹா ................. ஹா ..................... ஹா .......
தங்கம் என்றும் தங்கம் தானே !!!!!