ஜென்ம சரித்திரம் பாகம் 2 தொடர்ச்சி
![](https://eluthu.com/images/loading.gif)
கனவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பெண் யாராக இருக்க வேண்டும் என்றும் அந்ந இருட்டறையில் உள்ள படத்துக்கும் அந்த பெண்ணுக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கக்கூடுமா என்றும் அவன் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது.விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் அருகில் யாரோ நிற்பதை போல அறிந்தவன் சற்றே திரும்பினான்.அறையில் களைந்துக் கடந்த பொருட்களை எல்லாம் அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த உருவத்திடம், "அம்மா நீங்க எப்போ வந்தீங்க"என்றப்படி எழுந்து அமர்ந்தான்."அத நான் கேக்கனும்டா தம்பி, நீ எப்போ வந்த...........இன்னிக்குவேறிமுଞ நாள் காலேஜ் எப்படி போச்சு..............ராஜா உன் பக்கத்துல தான இருப்பான்................"
"அம்மா ...............நீங்க கவலையே படாதீங்க ராஜா எப்பவும் என் கூட தான் இருப்பான்.............சரி அதவிடுங்கமா நம்ம இடத்திலிருந்து நானும் ராஜாவும் மட்டும் தான் காலேஜ்ல படிக்கிறோம்............வண்டி எதுவும் இங்க வராதாம்..............அதனால................" என்றப்படி விழுங்கினான். "அதனால.................என்னப்பா ............"
"இல்லம்மா ..............அதனால பைக்ல போனா வசதியா இருக்கும்ல............. அதான் கேட்டேன்" என்றான். "அதெல்லாம் ஒன்னும் வேணாம்.............நீங்க ரெண்டுப் பேரு மட்டும் தான் படிக்க போறீங்கனு யாரு சொன்னது................"
"அப்புறம் வேற யாரு வரப்போரா "என்று சினுங்கியப்படி கேட்டான் விக்ரம். "அதாப்பா நம்ம வள்ளி இல்ல அவளும் உங்க கூட தான் படிக்க போறாளாம்........."என்று அம்மா கூற "என்ன அந்த வாயாடியா" ................என்று கத்தியப்படியே வீட்டிற்குள் நுழைந்தான் ராஜா.அருகில் இருந்த நாற்காலியை எடுத்து வைத்து "வாப்பா ராஜா, நாளையிலிருந்து வள்ளியும் உங்க கூட தான் வரப்போறா..........அதனால உங்க மூணுப்பேருக்காகவும் வண்டி ஏற்பாடு செய்திருக்கேன் .........."என்றார் அம்மா.
அம்மாவின் மீது இருவருக்கும் அதிகம் மதிப்பு உள்ளதால் அவர்களின் வார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.ஆனால் வள்ளி அவர்களுடன் இணைந்து படிக்கப் போவது இருவருக்குமே பிடிக்கவில்லை.அதற்கு காரணம் வள்ளியின் குணம்.வள்ளி,பத்தாம் வகுப்பு வரை அவர்களுடன் சேர்ந்து படித்தவள்.ராஜாவின் வீட்டருகே வசிக்கும் வள்ளி சிறுவயதில் ராஜாவின் வீட்டற்கு சென்று விளையாடுவாள்.ராஜாவுடன் விக்ரம் இருப்பதால் விக்ரமுடனும் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது.மூவருமே சிறுவயது நண்பர்கள்தான்.ஆனால் வள்ளி பார்ப்பதற்கு முரட்டுப் பெண்ணாகவும் பழகினால் அன்பாகவும் நடந்துக் கொள்பவள்.எந்நேரமும் துறுதுறுவென இருப்பாள்.விக்ரமும் ராஜாவும் அவள் தங்களுடன் இணைந்து படிக்க பிடிக்காததற்கு காரணம்..........போகும் இடத்தில் எல்லாம் வீண்வம்பு இழுத்துவிடுவாளோ என்ற பயத்தில் தானே தவிர வேறு எந்த காரணமும் கிடையாது.
மறுநாள் காலையில் இருவரும் கல்லூரிக்கு கிளம்பினர்.போகும் வழியில் கைகளின் நிறத்திற்கேற்ப வளையல்களை உடுத்தி காந்தல் இலைகளக்கொப்பான விரல்களை நீட்டியப்படி ஒரு அழகிய உருவம் வழிமறித்தது.அந்த உருவத்தை கண்டு திகைத்து சற்று நேரத்தில் உயிர் வந்தப்படி ராஜா, "அட வள்ளி நீயா.........ரெண்டு வருஷத்துல ஆளே மாறிப்போய்ட்ட........"என்றான்."அடேய் கொத்தவரங்கா கண்ணு போச்சா என்ன.............நான் மாறல்லாம் இல்ல...............நீ தள்ளி உக்காரு ,"என்றப்படி அமர்ந்தாள்."இப்பவே ஆரம்பிச்சிட்டா இன்னும் போக போக என்னென்ன ஆகப்போகுதோ" என்றான் விக்ரமிடம் ராஜா.
மூவரும் கல்லூரி வந்தடைந்தனர்.அதுவரை அமைதியின் உருவமாக வந்த விக்ரம்,கல்லூரி வந்தப்பின் வேகமாக நடக்கத் தொடங்கினான்.அவன் கண்கள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்தன.விக்ரம் விசித்திரமாக நடந்துக் கொள்வதை பார்த்த ராஜா அவன் பின்னால் இருந்து,"என்னடா...........யார இப்போ தேடுற"என்று அவன் கையை தோளில் வைத்தப்படிக் கேட்டான் சற்று திடுக்கிட்டவனாய் விக்ரம், "அதுலாம் ஒன்னுமில்லடா.......சரிவா கிலாஸ்க்கு போகலாம்" என்று அழைத்துச்சென்றான்.
ராகினியின் வருகையை எதிர்பார்த்து வாசலையே உற்று நோக்கியப்படி அமர்ந்திருந்தான்.அவனைச்சுற்றி நண்பர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.ராஜாவின் வற்புறுத்தலுக்காக அவர்களுடன் பேசத் தொடங்கினான். அந்த சமயத்தில் ராகினி வருவதைக் கண்டவுடன் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தினை அவனால் கூட அறிந்துக் கொள்ள முடியவில்லை.அவனால் சரிவர மூச்சும் விடமுடியவில்லை.அவளை பார்த்த கணத்தில் தொண்டைக்குழியில் எச்சிலும் சிக்கியது.அவனுக்குள் ஏற்பட்ட பதட்டத்தை யாரிடமும் அவனால் சொல்ல முடியவில்லை. அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணியதும் இன்று செயல் படுத்த முடியவில்லை. எனவே தூரத்திலிருந்தே யாரும் அறியாதவாறு அவளை நோக்கினான்.நண்பர்களுடன் பேசும் சமயத்திலும் அவனது விழிவிளிம்பில் அவள் முகம் தெரியும்படி அமர்ந்து பேச தொடங்கினான்.
அவளை கண்டவுடன் எழும் பயத்தினாலேயே அவளிடம் பேச அவனால் முன்வர முடியவில்லை.நொடி நேர பொழுதையும் வீணாக்காது அவளைப் பார்த்துக் கொண்டே ஆறு மாத பொழுதை வீணாக்கினான். அவனது நடவடிக்கைகளில் எற்பட்ட மாறுதல்களை உணர்ந்த ராஜா விக்ரமிடம் கேட்டுவிடலாம் என்று எண்ணி அவனிடம் வினவ தொடங்கினான், "விக்ரம் நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் நீ மறைக்காம என் கிட்ட சொல்லனும்...... என்றான் ". உடனே மேசையில் தாளம் தட்டிக் கொண்டிருந்த விக்ரம் " நான் ஏன்டா உன்கிட்ட மறைக்க போறேன் என்னன்னு கேளு எனக்கு தெரிஞ்சா சொல்றேன்"என்றப்படி திரும்பவும் தாளம் தட்டத் தொடங்கினான்.
"விக்ரம்,கொஞ்ச நாளா நீ நடந்துக்குற விதம் சரியில்ல..............முன்ன மாதிறி பேச மாட்ற, பாடத்தை கவனிக்க மாட்ற........நீ பாட்டுக்கு எங்கேயோ பாத்துக்கிட்டு உக்காந்திருக்க...............கனவுலோகத்துலியே மிதக்குற............எனக்கெதுவும் சரியாப்படல............" சற்று திடுக்கிட்டவனாய் விக்ரம், ," என்னடா சொல்ற நானா...............நான் அப்படியெல்லாம் இல்லேயே...........உனக்கென்னடா ஆச்சு " என்று மழுப்பினான்.
"விக்ரம் எனக்கெதுவும் தெரியாதுனு நினைக்காத எனக்கு எல்லாம் தெரியும், நீ அந்த ......................அந்த ராகினிப் பொண்ண பாக்குறத நான் கவனிச்சிட்டு தான் இருக்கன்...........ஒழுங்கா என்ன விஷயம்னு சொல்லு.............என்று மிரட்டினான் ராஜா"
ராஜாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி போய் நின்றான் விக்ரம்.நண்பனிடம் மறைத்தல் ஆகாது என்று எண்ணி அவனிடம் சொல்லத் தொடங்கினான்.தான் சிறு வயது முதல் இன்று நடந்தது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.அதை அனைத்தையும் கேட்டறிந்த ராஜா ,திகைத்தான்.
"அது எப்படிடா ஒரே முகம் ரெண்டு பேருக்கும் இருக்கும் ....................அதுவும் அந்த காலத்து போட்டோனு வேற சொல்ற.................அது எப்படி சாத்தியமாகும் " என்றான். "" அதுதான் ராஜா எனக்கும் தெரில விசித்திரமா இருக்கு................. " " சரி அதபத்தி அம்மாகிட்ட சொன்னியாடா "
" இல்ல ராஜா அம்மாக்கு எதுவும் தெரியாது."
"ஐயோ நான் எதபத்திக் கேக்குறன்னு புரிதா இல்லையாடா...............அந்த போட்டோவ பத்தி அம்மாக்கு தெரியுமானு கேக்குறன்...............அந்த போட்டோல இருக்குறது யாருனு தெரிஞ்சா ராகினி யாருனு தெரிஞ்சிடும்ல.............."
" இல்ல ராஜா அம்மாகிட்ட கேக்க வேணாம்.............அம்மா என்ன சின்ன வயசுலேயே அந்த இருட்டறைக்கு போக கூடாதுனு சொல்லிருக்காங்க........இப்போ இது தெரிஞ்சா திட்டுவாங்க "
" நீ என்னடா சரியான பயந்தாங்கோலியா இருக்க...............நீ அம்மாக்கிட்ட கேளு............இது பெரிய புதிரா இருக்கு..........அந்த போட்டோ உன்கிட்ட இருக்குறதுனால ராகினிய உனக்கு தெரிது.ஆனா ராகினிக்கு உன்ன சுத்தமா தெரியல..............இந்த சந்தேகத்த தீக்கனும்னா நீ அம்மாக்கிட்ட கேட்டுத்தான் ஆகனும் "
ராஜா சொன்னது அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டவானாய் அம்மாவிடம் கேட்டுவிடலாம் என்று வீட்டிற்கு சென்றான்.
தொடரும்....................