காதலும் போர்க்களமும்

போர்க்களம்
மண்ணுக்காக நிகழ்வது
காதல் களம்
பெண்ணுக்காக நிகழ்வது

அங்கே யுத்தம் நடக்கும்
இங்கே முத்தம் கிடைக்கும்

அங்கே ஈட்டி எடுத்துச் செல்லவேண்டும்
இங்கே ஊட்டி அழைத்துச் செல்லவேண்டும்

அங்கே வீரம் தேவை
இங்கே நேரம் தேவை

அங்கே வென்றால்
பெரும் தட்சணை கிடைக்கும்
இங்கே வென்றால்
வரதட்சணை கூட கிடைக்காது

அங்கே மரணம் அடைவது சாதாரணம்
இங்கே மனம் அடைவது சதா ரணம்

அங்கே எதிரிநாட்டு
மன்னரோடு போராடவேண்டும்
இங்கே எதிர்வீட்டு
மாமனாரோடு போராடவேண்டும்

எழுதியவர் : குமார் (23-Nov-16, 8:25 pm)
பார்வை : 471

மேலே