காத்திருப்பு

இருதயம் துடிக்கும் ஓசை கேட்கிறது...
இரு விழிகள் பாதையைப் பார்க்கிறது...
இளமைப் பூத்திருக்கும் இந்த இளமயில்
இத்தனை நேரம் யாருக்காக காத்திருக்குதோ?......


கண்களின் திரையில் காட்சிகள் ஓடுதோ?...
கன்னியின் மனமும் கனவுகள் சூடுதோ?...
கண்ணன் வருவானென்று கால்கள் நிற்குதோ?...
கரம் பிடிப்பானென்று தினம் ஏங்குதோ?......


நதியின் தீரத்தில் ஆடுகின்ற நாணல்...
நங்கையின் மேனிக்கு இணை ஆனதே...
நந்தவன பூக்கள் எல்லாம் தோற்குமே...
நங்கையின் இதழ்கள் சிந்தும் புன்னகையில்......


விளைந்த கனியின் மென்மை குணமுடையவளை
விலைகள் கொடுத்தால்தான் அழைத்துச் செல்வாரோ?...
விரும்பும் இதயம் ஒன்றுகூட இல்லையோ?...
விற்பனை உலகில் வந்தோமென்று தவிக்கின்றாளோ?......


சங்கீத சாரலோடு கழுத்தில் மாலையேறுமோ?...
சந்தன வாசம் காற்றோடு போகுமோ?...
சதங்கை ஒலிகள் மௌனமாய் கேட்குது
சகியே யாருக்காக நீ காத்திருக்கிறாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (25-Nov-16, 10:38 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 142

மேலே