அவள் வரவில்லை

அவள் வரவில்லை

தினம் என்னை
தழுவும் அவள்
இன்றும் வரவில்லை

என்னை அவள்
தழுவ
சுவாசம் சீராகும்

என்னை அவள்
தழுவ
மனம் அமைதி கொள்ளும்

என்னை அவள்
தழுவ
கனவில் கரைவேன்

என்னை அவள்
தழுவ
வலிகள் மறையும்

என்னை அவள்
தழுவ
மரணம் தழுவுவேன்

என்னை அவள்
விலக
மீண்டும் உயிர்த்தெழுவேன்

தினம் என்னை
தழுவும் அவள்
இன்றும் வரவில்லை
வேறு பெண்ணுடன்
நான் காதல் கொண்டதால்

தினம் என்னை
தழுவும் அவள்
பெயர் உறக்கம்
இன்றும் வரவில்லை

ஜெகன் ரா தி

எழுதியவர் : ஜெகன் ரா தி (26-Nov-16, 9:06 am)
Tanglish : aval varavillai
பார்வை : 758

மேலே