selfie குள்ள

ஒருவர் : அவருக்கு சின்ன வயசு போல இருக்கு எப்படி சார் இறந்தார் ....
மற்றொருவர் : selfie எடுக்கும் போது இறந்துட்டாரு சார் ...
ஒருவர் : எப்படி சார் !!!!!!!!!! selfie எடுக்கும் போது????????
மற்றொருவர் : மலை மேல நின்று ஆழத்தை பார்த்து எடுத்திருக்கிறார் கால் தவறி கீழ விழுந்து இறந்துட்டார் ..
ஒருவர் : அதெப்படி சார் அவரு selfie எடுக்கும் போது தான் விழுந்தாருன்னு சொல்றீங்க கால் தவறி விழுந்திருக்கலாமே ?
மற்றொருவர் : நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் அப்புறம் அவரோட தொலைபேசியை பாத்துக்கு அப்புறந்தான் முடிவு பண்ணூம் அவரு selfie எடுக்கும் போது தான் இறந்தாருன்னு ..
ஒருவர் : புரியல சார்
மற்றொருவர் : அவரோடு தொலைபேசில கீழ விழும் போது selfie எடுத்த புகைப்படம் அழகா பதிவாயிருக்கு ...
ஒருவர் : பயபுள்ள சாகும்போது கூட selfie எடுத்துட்டுதாண்ட செத்துருக்கான் ....
மற்றொருவர் : அது பரவாயில்ல சார் கீழ விழந்ததுக்கு அப்புறம் எடுத்த selfie புகைப்படத்தை facebook ல share பண்ணிட்டு 10like வாங்குனதுக்கு அப்புறந்தான் செத்திருக்கன் ..
ஒருவர் : அதெப்படி சார் சொல்றீங்க ..
மற்றொருவர் : 10 ஆவதா like கொடுத்த நண்பருக்கு இவரு ஒரு like கொடுத்திருக்கார் ...
ஒருவர் : புதைக்குறதுக்கு முன்னாடி ஒரு photo எடுத்துருங்க சார் இல்லன்னா நிராசையா ஆவியா சுத்தப்போறான் .....
மற்றொருவர் : அதுமட்டும் இல்ல சார் அவனோடு கூட இந்த phone ஐயும் செத்து புடைக்கிறதா முடிவு பண்ணிட்டோம்...
ஒருவர் : : selfie குள்ள selfie குள்ள selfie குள்ள ....ன்னு சொல்லி சொல்லி selfie எடுத்தே உள்ள போயிட்டான்...

எழுதியவர் : samuel (26-Nov-16, 2:01 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 481

சிறந்த நகைச்சுவைகள்

மேலே