விழி _அனுப்பும் _ தூது

கவின்மிகு கலையரசி கன்னியவள்
எழில்மிகு ஒப்பில்லா ஓவியமவள்
செதுக்கிட்ட சிங்கார சிலையவள்
விழிவழியே விடுகின்ற தூதுமது
வழிதேடி அலையாமல் வந்ததும்
கருவிழிகள் மலருது களிப்புடன்
கழியின்றிக் கூத்தாடும் உருவமாய்
மொழியின்றித் தவிக்கும் உயிராய்
பதில்கூற முடியாமல் துள்ளியது
உணர்வுகளை தட்டி எழுப்பியது !
மடலுக்கு மடலெனில் எழுதிடலாம்
கேளிவிக்கு பதிலொன்றும் கூறலாம்
விழிகளும் விழியோடு மோதியதால்
பழிதீர்க்கும் படலம் தோன்றவில்லை
காத்திருந்தக் கண்களாய் பணிந்தது
பூத்திருந்த புதுமலரின் வரவையும்
மண்டியிட்டு வணங்கும் பக்தனாய்
வரவேற்று மகிழ்ந்தது உள்ளமும் !
எதிர்பாரா நிகழ்வால் வியந்தது
கதிர்வீசும் சூரியனாய் உதித்தது
மறுக்காது மறுவினாடி உரைத்தது
இதுவரை இல்லா இன்பமென்று
விழிமூலம் முகிழ்ந்தக் காதலால்
வழிந்தது இதயம் ஆனந்தத்தால்!
பழனி குமார்