இன்றைய கல்வி -ஒரு மாணவனின் அவல ஒலி

காலை முதல் மாலை வரை
பள்ளியில் அடைப்பு படிப்பு
பின்னர் வீடு திரும்பி
சிற்றுண்டி உண்ட பின்னர்
ஓட்டம் எடுப்பேன் பக்கத்துக்கு
டுடோரியல் பள்ளிக்கு
நுழைவு தேர்வுகளுக்கு
என்னை தயார் படுத்திக்கொள்ள
இரவு எட்டு மணிக்கு
வீட்டிற்கு வந்த பின்னே
அவசர இரவு சாப்பாடு
பின்னர் பள்ளியில் கொடுத்த
வீட்டு வேலை , அதன் பின்னே
சிறிது நேரம் தோழர்களுடன்
கைபேசியில் .....................

பேசும்போதே தூக்கம்
கண்களைத்தழுவ
அப்படியே தூங்கிவிடுவேன் அசர்ந்து
அம்மா வந்து கைபேசியை
எடுத்து வைத்து
போர்வைப் போர்த்தி விடுவாள்

காலை மலர
நான் மீண்டும் பள்ளிச்செல்ல தயார்

இப்போது சொல்லுங்கள்
இந்த சிறுவயதில்
என்னை நானே
என் விருப்ப படிப்பு ஏற்று
முன்னேற்ற பாதையில்
செல்ல முடிவதில்லையே

ஒரு இயந்திரம் போல் அல்லவா
குறிப்பிட்ட படிப்புதான்
படித்து முன்னேறவேண்டும் என்ற
இன்றைய சமூக நிலை
இதில் நான் யாரை குறைசொல்ல ?
என் அன்பு பெற்றோரையா
இல்லை பள்ளி ஆசிரயர்களையா?

குறை இன்றைய
அரசாங்க கல்வி திட்டத்தில்
இதை சரி செய்வார் யார்
எப்போது ? தெரியவில்லை

என் தலை முறையில்
என் பிள்ளைகளுக்காவது
விடிவு காலம் வருமா ? தெரியவில்லை

என் வயதில் நான் விளையாடி
வெகு நாட்கள் ஆகிவிட்டன
எப்போதும் படிப்பு படிப்பு தான்
அதுவும் என்னை என் கற்பனையிலிருந்து
பிரித்திடும் அர்த்தமில்லா படிப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Nov-16, 8:43 am)
பார்வை : 108

புதிய படைப்புகள்

மேலே