தூக்கனாங்குருவி கூடு
பனை மரத்தின் உச்சியில் பலவீடு...
பொறியியலை விஞ்சிய குருவியின் சிறுகூடு...
விளக்கின்றி ஒளிர்கின்ற இயற்கை அதிசயம்...
மின்மினியின் ஒளிதான் கூட்டின் இரகசியம்......
வீட்டில் ஊஞ்சல் வீடேயிங்கு ஊஞ்சல்...
மழைநீரும் நுழையாது காற்றிலும் கலையாது...
பிண்ணல் நிறைந்த அந்தக் கூட்டிற்கு
இன்னல் தருகின்ற உயிர் மனிதனே......