வாழ்க்கை புத்தகம்
என்
வாழ்க்கை புத்தகத்தில்
பருவ பாடங்களில்
ஆண்டுகள் அத்தியாயங்களில்
நாட்களெனும் பக்கங்களில்
மணிநேர வாக்கியங்களில்
நிமிட வார்த்தைகளில்
நொடி எழுத்துக்களால்
நிரப்பப்பட்டுள்ளன
கருப்பு பக்கங்கள்
யாரும் அறியாதவை
இலக்கண போலிகள்
உலகு அறிந்தவை
உண்மை எண்ணங்கள்
உள்ளே ஒளிந்திருப்பவை
எழுதிய எழுத்துக்களை
எழுதுபவனால் மட்டுமேயுணரமுடியும்
புத்தகம் உருவாக்க
மூல மரம்
மூங்கில் மரம்
அழியும்வரை புத்தகத்துடன்...
எழுதிய மை
எழுதியவனின் எண்ணங்கள்...
சொந்தம் புத்தக
விலையை பொறுத்த
வியாபார பணம்
நட்பு எழுதுகோல்
காதல் காலங்கள்
கவி வடிவிலே....
தாயின் பாசங்கள்
புத்தகமே ஆன
பிறகு உள்ளே
எழுத என்ன
இருக்கு..