மாழையின் மேல் மயக்கம்

மாழையின் மேல் மயக்கம்:

மாழையே ! மாழையே !
மங்கையின் மாழையே !
தாளியால் என்னுள் சேரவிருக்கும் தங்கநிற மாழையே !
இயலிசை ஒன்று படித்தேன் உன் இதழில் மாழையே !
குயிலிசை ஒன்றை கேட்டேன் உன் குரலில் மாழையே !
விழியின் மாழையைக் கொண்டு என்னை வீழ்த்தினாய் மாழையே !
சிரிப்பின் மாழையைக் கொண்டு என்னை சிறைபிடித்தாய் மாழையே!
கனவிலும் என்னைக் கவர்ந்து இழுக்கும் கவர்ச்சி மாழையே !
காதலினால் என் கா்வத்தை அடக்கிய கண்ணாடி மாழையே !
பேரழகில் என் இதயத்திடம் போர்தொடுத்து வென்ற வீர மாழையே !
பேரன்பினால் என் பேராசையை தூண்டிய பேதை, மாழையே !
பிரிவுகளால் சரிவுகள் பல வரும் சகித்துக்கொள் மாழையே !
பிண்டமாய் சேர்ந்தாலும் உன் பின்னே நிழலாய் நிற்பேன், மாழையே !
அச்சத்தின் உச்சியிலும் உன் அருகில் இருப்பேன்,மாழையே !
எச்ஜென்மமாயினும் நீ ! எனக்கே மாழையே !..

தமிழோடு என்றும்,
- இள.கவியரசன்.

எழுதியவர் : இள.கவியரசன் (29-Nov-16, 2:16 pm)
சேர்த்தது : இளகவியரசன்
பார்வை : 64

மேலே