ஹைக்கூ

மழையில் குளிக்க
ஆசைப்பட்டது
தூண்டில் மீன் !

பச்சைக் கொடி
கண்ணில் பட்டதும் புறப்பட்டது
வான்மழை !

முள்ளில் சிக்கி
ஊஞ்சலாடியது
தூண்டில் மீன் !

வயிற்றில் பசி
முகத்தில் சிரிப்பு
இரவில் மீன்குழம்பு !

கொட்டும் மழையில்
தோப்புக்கரணம்
படிக்காத மீன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Nov-16, 8:46 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : haikkoo
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே