இதழகல் வெண்பா

கண்ணேநின் கட்டழகைக் கண்டதிலே ஏங்கிநின்றேன்
எண்ணத்தில் தித்தித்தாய் ஏந்திழையே!- தண்நிலா
காய்கிறதே! தாரகை கண்ணடித்தே செல்கிறதே!
தேய்ந்தேனென் ஏக்கத்தைத் தீர்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Dec-16, 11:30 pm)
பார்வை : 104

மேலே