காதலுக்கு சாதி இல்லை

எனக்கு உன்னைப் பிடிக்கும்
உனக்கும் என்னைப் பிடிக்கும்

ஆனால் இவ்வுலகம்
நம்மை வெறுக்கும்

நீயும் நானும் வாழ்க்கையில் ரசித்திட
மனம் துடிக்கும்

ஆனால் இச்சமுதாயம் நம்மை
பிரித்திடத் துடிக்கும்

காதல் என்ற வார்த்தை தவறா
இல்லை காதலிப்பவர்கள் மேல் தவறா

சாதி மதம் வரதட்சணை என்ற
கொள்கையை ஒழிக்கப் பிறந்த
காதலை ஏன் இன்னும்
வெறுக்கின்றீர்கள்.....?!

பாகா

எழுதியவர் : பாகா (2-Dec-16, 3:56 am)
பார்வை : 271

மேலே