மழையில் கோழிக்குஞ்சு

கடல் போல நீரிங்கு நிரம்பியது...
உடல் இரண்டு குளிரில் நடுங்கியது...
நடந்து செல்ல வழிகள் இல்லை...
முடங்கியது ஈருயிர்கள் வாழும் நிலை......


கொற்றவைப் பெற்ற இளம் இராணிகள்...
பெற்ற அன்னையை இழந்த குஞ்சுகள்...
உற்ற நண்பனாய் உதவிய செருப்பிலேறி
சுற்றிப் பார்த்து சொந்தத்தைத் தேடுகிறது......

எழுதியவர் : இதயம் விஜய் (2-Dec-16, 12:59 pm)
பார்வை : 159

மேலே