இராமன் கொண்ட முரண்
இராமன் கொண்ட. முரண்.
அகலிகை
அறிந்தாள் இல்லை
வந்தவன்
இந்திரனென்று.
அறியாமல்
அந்நிய மொழி பேசினாள்.
கல்லாக்கினான்
கணவன்.
பெண்ணாக்கினான்
இராமன்.
வேடம் தரித்து வந்த
வில்லன். என்று
அறியாமல் தான்
பிச்சை இட்டாள்
சீதை.
கவர்ந்தவன். அரக்கன்
ஆனபோதும்,
யாசித்து, அனுமதி
வேண்டி
நின்றான்.
அவள் காதலுக்காக.
கை பிடித்தவன்
கோசலை மைந்தன்
அவதார புருஷன்
ஊருக்கு
நியாயம் வழங்க,
தீ நாக்கு தீண்ட
செய்தான்.
தீ. தீண்டும் முன்னே
கட்டியவன்
சொல் நாக்கு தீண்டி
சவமானாள் சீதை.
இறங்கினாள்
சடலமாக.
கல்லுக்கு விமோசனம்
அளித்தவன்
கற்புக்கு
சாபத்தை அளித்தான்.
அவதாரமும் கூட
மனிதனாக. வந்தால்
தடுமாறும் போல.
. மீனாகோபி.