இலவு காத்தக் கிளியே
![](https://eluthu.com/images/loading.gif)
மேகம் கருக்கையிலே சோகம் மரிக்குதே...
காற்று வீசயிலே அதுஏனோ சிரிக்குதே...
மழையை நெனச்சு மனசும் துடிக்குதே...
கண்ணு முழி ரெண்டும் கலங்குதே......
நெல்ல வெதச்சு நாத்தையும் நட்டேன்...
முல்லப் பூவாக வானந்தான் தெரியுதே...
ஏத்தம் கட்டி நீரிறைக்க கெணத்துல
கல்லும் மண்ணுந் தானே இருக்குது......
சோறு போடும் இந்த நெலத்தின்
வயிறு காஞ்சிப் போய்த்தான் கெடக்குது...
வானம் பாத்து வெளஞ்சப் பூமி
தானமா மழையைத் தானே கேட்குது......
விடியுற பொழுது யெல்லாம்
இங்கே ஏமாற்றந்தான் கொடுக்குது...
மடியுற உயிர்க ளெல்லாம்
மதித்திட பலமனசும் மறக்குது......