தலைக்கு 2000தான்

பரமசிவன் வங்கியில் பணமெடுக்க நின்றிருந்தார். அவர் கணக்கில் சமீபத்தில்தான் கையிருப்பிலிருந்த கறுப்புப் பணம் 50,000 ஐ மோடி பாணியில் டெபாசிட் பண்ணியிருந்தார். வங்கி மேலாளர் வரிசையில் நின்றிருந்தவர்களிடம் சார்....வங்கியில் போதிய பணமில்லை... அதனால தலைக்கு 2000 மட்டும்தான் வழங்க முடியும்...கோவிச்சுக்காதீங்க....ப்ளீச்னார்....சற்றும் முயற்சியில் மனம் தளராத பரமசிவன் தன் மகன் பாலமுருகனுக்கு செல்போனித்தார்....."டேய்.... பையா...எஸ்.பி.ஐ மெயின் பிராஞ்சுக்கு சீக்கிரம் வாடா...இங்கே மேனேஜர் தலைக்கு 2000தான் தருவாராம்....ஆறுதலையோட அர்ஜென்டா வந்து சேரு...உங்க ஆத்தா பணத்தோட போவலைன்னா...ஆடிப்பூடுவா.....சீக்கிரம்...வா...!

எழுதியவர் : செல்வமணி (3-Dec-16, 9:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 260

சிறந்த நகைச்சுவைகள்

மேலே