பாறையிலும் வளரும் ரோஜாச்செடி 555 ௨௫௦௦

நண்பா...

நீ செல்லும் பாதையில்
புற்கள் இல்லை...

முட்கள் என்று
எப்போதும் வருந்தாதே...

அன்று யாரோ சென்ற முட்கள்
நிறைந்த பாதையில்தான்...

நீ புல்வெளி என்று
எளிமையாக இன்று நடக்கிறாய்...

நீ தயங்காமல் நடந்து சென்று
உன் பாதசுவடுகளை பதிவுசெய்...

உலக வரலாற்றில்
நீயும் இருப்பாய்...

பாறைமேல் விழும் விதைகள்கூட
மரமாக வளர்ந்து நிற்கிறது...

உன்னை பாறைமேல்
விழசொல்லவில்லை...

மண்மீது இருக்கும் நீ உன்
சுவடுகளை பதித்துவிட்டு செல்...

நீயும் வரலாறு
படைப்பாய் நாளை...

தன்னம்பிக்கையும் மனதைரியமும்
என்றும் சோர்ந்துவிடக்கூடாது...

தோழனே நீ
முன்னேறி செல்...

நாளை பலர் உன்னை
பின் தொடர்வார்கள்.....


[இது என்னுடைய 2500வது படைப்பு]

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Dec-16, 7:46 pm)
பார்வை : 133

மேலே