இந்திய அரசியலில் நடிப்பு அம்சம்
ஒரு ரசிகனாய் பார்க்கிறேன்,
பார்க்கிறேன் என்பதை விட
எதிர்பார்க்கிறேன்.
இந்திய அரசியல்
எனக்கு சினிமா போல
தினமும் நவரசத்தை படைக்கிறது,
கண்டு களிக்க.
களிப்பு மட்டும் தான் மிஞ்சுகிறது
அவ்வளவு தான்,
அதற்காகவா இந்த அரசியல்?
என எனக்குள் வியக்கிறேன்.
பாகிஸ்தான் எனக்கு வாய்க்கா தகராறு போலவும்
ஸ்ரீலங்கா பக்கத்து வீட்டு திமிர் பிடிச்சவன் மாதிரியும்
தெரியிறது மாதிரி
லல்லு சந்திரபாபு மாதிரியும்
நிதிஷ்குமார் தங்கவேலு மாதிரியும்
முலாயம்சிங் பாலையா மாதிரியும்
ஒரே காமெடி போங்க.
கேஜ்ரிவால் ஜீவா மாதிரி ஒரு ஹீரோ
மம்தா பானர்ஜி நயன்தாரா மாதிரி ஒரு ஸ்ட்ராங் ஹீரோயின்
அமித்சா ஆனந்தராஜ் மாதிரி, ராஜ்நாத் விஜயகுமார் மாதிரி,
அருண்ஜெட்லி ஒரு சந்தானம் மாதிரி,
மோடி ஒரு விஷால் மாதிரி
என்னமா தெரியிறாங்க,
என்னென்னெமோ பேசுறாங்க,
ஏதெதோ செய்றாங்க.
ஒரே காமடி தான் போங்க.