ஒரு வழி அதை நீ தெரிவி

யாரை நம்பி
என் ஜனனம்
என் நம்பிக்கை
இனி நீ தான்
எனைப் போன்ற
இச்சமுதாயத்தின்
எதிர்காலத் தூண்கள்
ஆட்டம் காண்கின்றது.
எம் தந்தைமார்களோ
போதையின் பிடியில்
எங்கள் தாய்மார்களோ
தேவையின் பிடியில்
நாங்கள் இளைப்பாறுவது
யார் மடியில்?
வேறு வழியின்றி
தஞ்சமடைந்தேன்
உன் மடியில்
என் வேண்டுதல்
யாதெனில்
எமைக் காக்க
ஒரு வழி
அதை நீ தெரிவி..,
#sof. #சேகர்