பிரியா விடை

சோகம் ஒன்னு பிரிவ தந்து நெஞ்ச தாக்குதே  - என்
தேகம் தோறும் தீயப் போல
எரிக்க பாக்குதே   -  நான்
துள்ளி குதிச்ச பள்ளி வாழ்க்கை
விட்டுப் போகிறதே   - ஒரு
கள்ளி போல மனசும்  காஞ்சி
பட்டுப் போகிறதே.....

கண்கள் ரெண்டும் கலங்கி நிக்கும்
உன்ன பாக்க மனசு துடிக்கும்-நான்
தேடும்போது நீ இல்லையின்னா என்
இதயம் உதிரம் வடிக்கும்

எதிர்பார்ப்பில்லாத உறவுதான்
எந்த உறவென்றாலும் பிறவுதான்-இதில்
விரிசல கொடுத்தது பிரிவுதான்

நிலையில்லாத உலகிலே எந்த
நிலையிலும் தாங்கும் நட்புதான்
தாயுக்கும் ஈடு என் நண்பன் தான்..

ஒட்டுப் பச போட்டு நான்
ஒட்டி வச்ச நேசத்திலே
வெட்டுக் கத்தி ஒன்னு என் 
நெஞ்ச கிழிக்க துடிக்கிறதே

கண்ணக் கட்டி இருட்டுக்குள்ள
திக்குமுக்கு ஆடுறனே
வெளிச்சம் தந்த நேசம் என்ன
விட்டுத் தள்ளி போகிறதே....

ஆலமரம் போல நட்புதான் - என்ன
அழவிட்டுப் போறது இப்பதான்
மனசுதான் பிரிவுல கருகுதான்..

துயருல துடிக்கிற நேரத்தில் 
தோள் கொடுத்துத் தாங்கிய நட்புதான்
தோழனின் தோள்களே
தூண்கள்தான்.....

சோடிக் கிளி போல  - நான்
கூடி வாழ்ந்த மனசுக்குள்ள
மின்னலிடி போல என்
மனசும் பிரிஞ்சு  தவிக்கிறதே

சின்ன சின்ன நாரெடுத்து
சேர்த்து வச்ச கூடு இது
சிட்டு சேர்ந்து ஆடயில
கழுகு ஒன்னு  தொரத்துறதே.....

சோகம் ஒன்னு பிரிவ தந்து நெஞ்ச தாக்குதே -  என்
தேகம் தோறும் தீயப் போல
எரிக்க பாக்குதே  -   நான்
துள்ளி குதிச்ச பள்ளி வாழ்க்கை
விட்டுப் போகிறதே   - ஒரு
கள்ளி போல மனசும்  காஞ்சி
பட்டுப் போகிறதே.......

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (9-Dec-16, 4:55 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : priya vidai
பார்வை : 927

மேலே