அவனும் அவளும்

அவனும் அவளும்

பூர்வஜென்ம தொடர் உறவாய்
பூத்து குழுங்கிடும் புதுமலராய்

அவன் அழக்கண்டு அவள்சிரித்த
அந்த அதிசய நாள்முதலாய்

உயிரொன்று இரண்டாய் உருக்கொண்டாலும்
உள்ளத்தில் அன்பாய் கருக்கொண்டே

அவளுக்கு அவன் தவமாய்
அவனுக்கு அவள் வரமாய்
இணைந்தே சபிக்கின்றனர் இயற்கையை

இப்பிறப்பின் குறைநீங்கி எப்பிறப்பும்
இவரோடு தொடர வேண்டுமென்றே.!

கேட்டவரம் தவறினாலும் தவறாது..
கொடுத்த சாபம் கிட்டுமென்ற
நம்பிக்கையில்..அவனும் அவளும்
-மூர்த்தி

எழுதியவர் : moorthi (9-Dec-16, 6:53 pm)
Tanglish : avanum avalum
பார்வை : 87

மேலே